Commencing Calculus Learning for AI and Data Science

Commencing Calculus Learning for AI and Data Science

வணக்கம்,
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களை அழைத்து வந்து அவர்களுடைய அறிவும் ஞானமும் நம்முடைய தமிழ் சமூகத்துக்கு தமிழ் மொழி மூலமாக பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதன் ஒரு பகுதியாக, டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் படிப்பதற்கு முன்பு இதன் இதன் அடிப்படைகளான Mathematics and Statistics இவற்றை நாம் நன்றாக வேரூன்றி படித்து தெரிந்திருந்தால் மட்டும்தான், நாம் படிக்கும் டேட்டா சயின்ஸ் and ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் பயன்படுத்தி நம்மால் புதிதாக ஒன்றை உருவாக்க முடியும் / படைக்க முடியும்

நாம் ஏற்கனவே Linear Algebra நடத்தி முடித்து விட்டோம் இப்பொழுது Calculus கற்றுக் கொள்ள வேண்டிய நேரம்.

ென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) கணிதத் துறையில் பணிபுரியும் Dr. K. Sivaraman Ph.D அவர்கள் நமக்கு Calculus நடத்துவதற்கு முன்வந்துள்ளார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை டாக்டர் சிவராமன் அவர்கள் நம் (Data Science in Tamil) குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு Calculus எவ்வாறு Data Science & Artificial Intelligence ல் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி விரிவான வகுப்புகள் தமிழில் எடுக்க உள்ளார்கள்.

முதல் வகுப்பு இந்த வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் (3 PM to 5 PM (IST)) – Aug 30 2025 . அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Meeting ID: 869 3564 2497
Passcode: DSIT

Thanks
A.Melcose

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Need Help?